ஓடும் ரயில் முன் செல்பி! மூன்று இளைஞர்கள் பரிதாப பலி!

0
0
ஓடும் ரயில் முன் செல்பி எடுக்க முயன்ற மூன்று வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
பெங்களூர் அருகே இன்று காலை இச்சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூருவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பிடதி அருகே  இன்று மூன்று வாலிபர்கள் பைக்கில் வந்தனர்.
ரயில் இன்ஜின் முன் அவர்கள்  செல்பி எடுக்க ஆசைப்பட்டனர்.
இதற்காக அப்பகுதியில் இருந்த இருப்புப்பாதையின் நடுவே சென்றனர்.
பெங்களூர் செல்லும் ரயில் வந்த போது அவர்கள் செல்பி எடுத்தனர்.
ஆனால், அதற்குள் ரயில் இன்ஜின்  அவர்கள் மீது மோதியது.
மூவரும் தூக்கிவீசப்பட்டு இறந்துள்ளனர்.
அவர்கள் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here