பஞ்சாயத்து தீர்ப்பால் பரிதாபமாக இறந்த இளைஞர்!

0
0

அநீதியாக குற்றம்சாட்டி அருவருக்கத்தக்க தண்டனையை பஞ்சாயத்து தந்ததால் இளைஞர் ஒருவர் இறந்துள்ளார்.

மனதை பதறவைக்கும் இச்சம்பவம் நடந்துள்ளது ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில்.

அங்குள்ள தர்கைன் கிராமத்தை சேர்ந்த வியாபாரி முகமது அப்துல்லா.

இவரது மகன் பைசல் ஹப்துல்லா.

இவர் அக்கிராமத்தை சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

உள்ளூர் பஞ்சாயத்தினர் இதனை விசாரித்தனர்.

பைசல் குடும்பத்தினருக்கு பஞ்சாயத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.

அப்பெண்ணுடன் தனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை. அதனால் பணம் கட்ட மாட்டேன் என்று பைசல் கூறினார்.

அப்படியென்றால், அப்பெண்ணின் சிறுநீரை குடிக்க வேண்டும் என்று பஞ்சாயத்து நிபந்தனை விதித்தது.

இதனால் மனம்வெறுத்த அந்த இளைஞர் தனக்கு 2நாள் அவகாசம் வேண்டுமென கேட்டார்.

பஞ்சாயத்தினர் அதற்கு சம்மதித்தனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிறு  அங்குள்ள ஏரியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் பைசல்.

தனது இறுதி குரலை செல்போனில் பதிவுசெய்து நண்பனிடம் கொடுத்துள்ளார்.

அதில், தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை.

பஞ்சாயத்தினர் அருவருக்கத்தக்க தீர்ப்பால் மனம் உடைந்து இந்த முடிவை எடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here