கனவில் வந்து கடவுள் சொன்னார்! நெடுஞ்சாலையில் சிலைதேடி பள்ளம் தோண்டியவர் கைது! -விடியோ

0
0

சாமிசிலை தேடி நெடுஞ்சாலையில் 20அடி பள்ளம்தோண்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தெலங்கானா மாநிலம் குண்டலகட்டா கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்(20).

அப்பகுதியில் உள்ள கோவிலில் பூஜை செய்துவருகிறார்.

அவரது கனவில் கடவுள்வந்து சாமி சிலை பூமியில் புதைந்துள்ளதாகவும், அதனை எடுத்து பூஜை செய்யவேண்டும் என்றும் கூறியதாம்.

இதனை கிராம தலைவரிடம் மனோஜ் தெரிவித்தார்.

அதிகாரிகள் புடைசூழ கிராம நிர்வாகிகள் மனோஜ் கூறிய இடத்துக்கு வந்தனர்.

ஜேசிபி எந்திரம் உதவியுடன் 20அடி குழிதோண்டினர்.

கனவில்வந்து கடவுள்சொன்னபடி சிவலிங்கம் சிலை எதுவும் அகப்படவில்லை.

இவர்கள் குழிதோண்டிய இடம் ஹைதராபாத்-வராங்கல் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை பகுதியாகும்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

போலீசாருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக மனோஜ், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 6பேர் கைதுசெய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here