‘கொட்டாவி’ கெட்ட ஆவியா..?!

0
0

மூளையில் நடக்கும் எந்த வகையான செயல்பாடு கொட்டாவியைத் தூண்டுகிறது என்று தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மூளையில், உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதியில் கொட்டாவியைத் தூண்டும் செயல் நடப்பதாக நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

பிரைமரி மோட்டார் கார்டெக்ஸ் எனப்படும் உடலியக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியே டௌரெட்ஸ் சின்ட்ரோம் எனப்படும்
தசை பிடிப்புக்கும் ஓரளவு காரணமாக இருக்கிறது.

எனவே, இலகுவாக மற்றவர்களுக்கும் தொற்றும் இந்த கொட்டாவியை புரிந்துகொள்வது டௌரெட்ஸ் சின்ட்ரோமைப் புரிந்துகொள்ளவும்
உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மற்றவர்களுடைய சொற்கள், செயல்களைப் போலவே செய்வதை எக்கோஃபெனோமினா (எதிரொலிப் புலப்பாடுகள்) என்கிறார்கள்.
இந்த எதிரொலிப் புலப்பாட்டின் ஒரு வகைதான்.

அதாவது மற்றவரைப் பார்த்து நாமும் விடும் கொட்டாவி. இதே போல டௌரெட்ஸ்
சின்ட்ரோம், வலிப்பு, ஆட்டிசம் போன்றவற்றிலும் இந்த எதிரொலிப் புலப்பாடுகள் இருக்கின்றன.

கொட்டாவி விடும்போது, மூளையில் என்ன நடக்கிறது என்ற சோதனை 36 பேரிடம் நடத்தப்பட்டது. மற்றவர்கள் கொட்டாவி விடும்போது இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் கவனித்தார்கள்.

கரண்ட் பயாலஜி என்ற பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வுக் கட்டுரையில் சிலர் கொட்டாவி விடுவதில் தவறில்லை என்கிறார்கள். சிலர் அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஒவ்வொருவரது பிரதான மோட்டார் கார்டெக்ஸ் எப்படி வேலை செய்கிறது? அது எப்படி உணர்ச்சிவசப்படுகிறது என்பதைப் பொறுத்துத் தான் அந்த குறிப்பிட்ட நபர் கொட்டாவி விடுவதற்கான காரணமும் அமைகிறது.

வெளிபுறத்தில் இருந்து மூளையைத் தூண்டும் ‘எக்ஸ்டர்னல் டிரான்ஸ்க்ரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன்’ (டி.எம்.எஸ்.) என்ற கருவியைக் கொண்டு மோட்டார் கார்டெக்ஸ் உணர்ச்சிவசப்படும் அளவை அதிகரிக்க முடியும்.

இதன் மூலம் கொட்டாவி விடுவதையும் அதிகரிக்க முடியும். கொட்டாவி ஆராய்ச்சியில் இந்தக் கருவியை விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த உணர்ச்சிவசப்படுதலை குறைக்க முடிந்தால் டௌரட்ஸ் சிண்ட்ரோம் விளைவுகளையும் குறைக்க முடியும் அது தொடர்பான ஆராய்ச்சியில்தான் ஈடுபட்டிருக்கிறோம்,” என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட ஜார்ஜினா ஜாக்சன் (அறிதல்சார் நரம்பு இயக்கவியல் பேராசிரியர்).

கொட்டாவியை ஆராய்வதில் டி.எம்.எஸ். என்பது புதுமையான முறை என்கிறார் ஆண்ட்ரூ கேல்லப் என்ற உளவியலாளர். பிறரையும் தம்மை போலவே நினைக்கும் குணத்துக்கும் கொட்டாவி விடுவதற்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்தவர் இவர்.

 

சிம்பிளா சொல்லனும்னா, மோட்டார் கார்டெக்ஸ் மூலம் உணர்ச்சிவசப்படுதல் அதிகமானா மூளை சோர்வடைந்து கொட்டாவியாக வெளிப்படுகிறது.

Related Topics : Health News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here