உலக மல்யுத்த போட்டி! இந்திய வீராங்கனைக்கு தங்கம்!!

ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சோனம் தங்கம் வென்றார்.

கிரீஸில்ந ஜூனியர் உலகச் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது.

இதில்  56 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவை சேர்ந்த சோனம் பங்கேற்றார்.

இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை செனா நகமொட்டாவுடன் அவர் மோதினார்.

இருவருக்கும் இடையே பரபரப்பாக மோதல் நடந்தது.  இறுதியில் சோனம் வெற்றி பெற்றார்.

3க்கு 1 என்ற புள்ளிகளில் ஜப்பான் வீராங்கனையை அவர் வீழ்த்தினார்.

38கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மமதா மாருதி கெலோஜி வெண்கலம் வென்றார்.

43 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனையான நீலம்,  பங்கேற்றார். அவர் வெண்கல பதக்கத்தை வென்றார்.

60 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்திற்கான இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் அனுசு, ஜப்பான் வீராங்கனை நயோமிருகி மோதுகின்றனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION