உலகின் மிக நீண்ட வாழ்த்துபேனர்! அபுதாபி வாலிபர் கின்னஸ் சாதனை!!

உலகின் மிக நீண்ட ரசிகர் பதாகையை தயாரித்ததாக அபுதாபி வாலிபர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
அரபுநாடுகளில் கால்பந்தாட்ட போட்டி மிகவும் பிரபலமான ஒன்று.
2022ல் கத்தாரில் பிபா கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது.
குவைத் கால்பந்து அணியான அல்வசலில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு வாழ்த்து தயாரித்து 1182மீட்டர் நீள பதாகை உருவாக்கப்பட்டுள்ளது.


இதற்காக அபுதாபியை சேர்ந்த வாலிபர் சலீம் அல்கர்பி பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
நான் அபுதாபியை சேர்ந்தவன் என்றாலும் குவைத் கால்பந்து அணி எனக்கு மிகவும் பிடிக்கும்.
அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் திறமையானவர்கள்.
1992ல் கால்பா அணியை தோற்கடித்து அல்வசல் கோப்பையை வென்ற போட்டி எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.


அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கால்பந்து வீரரின் ஜெர்சி உடையை அனுப்பியுள்ளேன்.
மாரடோனா பேரனுக்கு ஒட்டகக்குட்டியை பரிசாக அனுப்பியுள்ளேன் என்றும் அவர் கூறுகிறார்.
எனது பரிசை ஏற்றுக்கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதிய கடிதத்தில் அடுத்து என்ன செய்யவுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.


அப்போது யோசனை செய்து மிக நீண்ட வாழ்த்து பேனர் தயாரித்தோம். இதனை உருவாக்க 12நாட்கள் எடுத்துக்கொண்டது. ஆனால், திட்டமிட்டது 4ஆண்டுகள்.
கின்னஸ் புத்தகத்தில் இப்பேனர் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது என்றார் அவர்.

About the author

Related

JOIN THE DISCUSSION