உலகிலேயே அழகான குட்டிப்பெண்!

0
0

பெர்லின்: உலகின் அழகான குழந்தையாக ரஷ்யாவில் உள்ள அனஸ்தசியா நியாசிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆறுவயதான நியாசிவாவின் புகைப்படங்களை 2015ம் ஆண்டில் இருந்து இன்ஸ்டாகிராமில் அவரது தாய் அன்னா பகிர்ந்துவருகிறார். அதனை உலகம் முழுவதும் இருந்து பல லட்சம்பேர் பார்த்து பகிர்ந்துவருகின்றனர்.

நீலக்கண்கள், முத்தம் கொடுக்கத்தோன்றும் கன்னம், பார்பிமுகம் என்று இக்குழந்தையை உலகமே கொண்டாடிவருகிறது.
இந்த ஆண்டு பிரான்ஸ் வோக் பத்திரிகை நடத்திய சுட்டிக்குழந்தை போட்டியில் நியாசிவா முதலிடம் பிடித்துள்ளார்.
இதனால் குழந்தைகள் பயன்படுத்தும் பல பொருட்கள், சொகுசுத்தயாரிப்புகளுக்கு அவர் மாடலாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.


அதேநேரம், இக்குழந்தை மாடலிங்கில் ஈடுபடுவதற்கும் அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேவையற்ற வகையில் அரிதாரம்பூசி குழந்தையின் அழகையும், அறிவையும் மாடலிங்துறை மங்கச்செய்துவிடும் என்று வலைமக்கள் விமர்சித்துள்ளனர்.


இதற்காக திட்டமிட்டே அவரது தாய் அன்னா செயல்படுகிறார் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
தற்போது ரஷ்யாவின் குழந்தைகள் விழிப்புணர்வு சம்பந்தமான விளம்பரதூதராக நியாசிவா பணியாற்றுகிறார். இவர் இரினாஷேக்கைப்போன்று வருங்காலத்தில் மாடலிங் துறையில் கொடிகட்டிப்பறப்பார் என்று அத்துறைசார்ந்த வல்லுநர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here