மீண்டும் உலக சாம்பியன் பட்டம்! விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்!!

0
0

ரியாத்: உலக ரேபிட் செஸ் போட்டியில் மீண்டும் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த்.
ரியாத் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 9-வது சுற்றில் ஆனந்த் வென்றார்.
15 சுற்றுகளின் முடிவில் ஆனந்த் உள்ளிட்ட மூவர் 10.5 புள்ளிகள் பெற்று முதலிடம் வகித்தனர். இதனால் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


தொடர்ந்து ஆறு சுற்றிலும் வெற்றிகள், 9 டிராக்கள் மூலம் முதல் இடத்தைப் பிடித்தார் ஆனந்த். பிறகு டை பிரேக் முறையில் உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஆனார் ஆனந்த். டை பிரேக் போட்டியில் ரஷ்யாவின் ஃபெடோசீவை 1.5 – 0.5 என்கிற கணக்கில் தோற்கடித்து சாம்பியன் ஆனார்.
48 வயதில் மீண்டும் உலக சாம்பியன் ஆகியிருக்கும் ஆனந்த் இந்த வெற்றி குறித்து கூறியதாவது:


இந்தப் போட்டியில் நான் கலந்துகொள்வதாகவே இல்லை. ஏனெனில் மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அப்படியொரு நிலை உண்டானது.
வீ ஆர் தி சாம்பியன்ஸ் என்கிற பாடல் என் தலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. வரிகள் அவ்வளவு உண்மையாக உள்ளன. இத்தருணத்தைப் பற்றி பிளிட்ஸ் போட்டிக்குப் பிறகு சொல்கிறேன்.
எனது வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. தற்போது பெருமிதத்தில் மிதப்பதாக உணர்கிறேன்.


ரேபிட் மற்றும் பிளிட்ஸில் மிகவும் வலுவாக உள்ள வீரரை வென்றதில் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here