பெண்கள் முடியை வெட்டிச்செல்லும் கும்பல்! பகீர் தகவல்!!

0
0

டெல்லி அருகே குர்கானில் பெண்களின் தலைமுடியை வெட்டிச்செல்லும் கும்பல் நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

குர்கானில் உள்ள அசோக்விஹார் பகுதியை சேர்ந்தவர் சுனிதா தேவி.

சம்பவத்தன்று அவர் இரவு சமையல் செய்துகொண்டிருந்தார்.

அப்போது சூலத்துடன் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார்.

இதனால் பயந்துபோய் மயக்கமானார் சுனிதா.

அவருக்கு நினைவு திரும்பி பார்த்ததும் அவரது தலைமுடி வெட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.

சுனிதாதேவிக்கு நேர்ந்ததைப்போன்றே வேறு சில பெண்களும் தலைமுடியை பறிகொடுத்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் மார்வார்ட் பகுதியில் இதேபோன்ற சம்பவம் ஒரு மாதத்துக்கு முன் நடைபெற்றது.

அச்சம்பவத்தில் யாரும் பிடிபடவில்லை.

இந்நிலையில், குர்கானில் பெண்களின் முடியை வெட்டிச்செல்லும் கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரித்து வருகிறோம். சம்பவ இடத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் பரிசோதித்து வருகிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here