நாப்கின் மீதான வரி ரத்து செய்யவேண்டும்! பிரதமருக்கு நூதன கடிதம்!!

0
1

குவாலியர்: பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கின் மீதான ஜிஎஸ்டி வரியை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு அதிர்ச்சி கடிதம் எழுதப்பட்டுள்ளது.

குவாலியரை சேர்ந்த மாணவிகள் பிரதமர் மோடிக்கு, சானிட்டரி நாப்கின் மீதே கோரிக்கை கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.
சானிட்டரி நாப்கின் மீது மத்திய அரசு 12% ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது.
இந்நிலையில் குவாலியரை சேர்ந்த மாணவிகள் ஒன்றிணைந்து புதுமையான முறையில் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


1000 நாப்கின்களில் நாப்கின் மீதான 12 சதவீத ஜிஎஸ்டி யை நீக்கம் செய்ய வேண்டி கடிதம் எழுதியு பிரதமருக்கு அனுப்பியுள்ளனர்.
இதற்காக கடந்த 4 ஆம் தேதி முதல் சமூக வலைதளங்கள் மூலம் ஆதரவு திரட்டினர்.


ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் நாளை மறுதினம் டெல்லியில் நடைபெறவுள்ளது.
அதில் பயோடீசல் இன்ஜின்கள், வெண்ணெய், டிஜிட்டல் கேமரா மீதான வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளது. நாப்கின்கள் மீதான வரியை முழுமையாக நீக்குவது குறித்தும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here