லண்டன் தப்பியது: 6தீவிரவாதிகள் கைது

0
0

லண்டனில் தங்கியிருந்த தீவிரவாதிகளை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
இச்சம்பவத்தில் ஒரு பெண் தீவிரவாதி படுகாயமுற்றார். 6பேர் கைதாகி உள்ளனர்.

லண்டன் நாடாளுமன்றத்தில் கத்திகளுடன் புகுந்த நபர் வியாழக்கிழமை கைதானார்.


அவரிடம் இருந்து பெற்ற தகவல் அடிப்படையில் நகரம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

புலனாய்வு போலீசார் அளித்த தகவலின்படி,
ஹார்ல்ஸ்டன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை போலீசார் சுற்றிவளைத்தனர்.

அங்கு தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கும் நபர்கள் தங்கியிருந்த வீட்டில் அதிரடியாக புகுந்தனர்.
துப்பாக்கிச்சூடு, மயக்கவாயு செலுத்தி அங்கிருந்த 4பேரை கைது செய்தனர். மேலும் இருவரும் கைதாகி உள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் காயமுற்றார். அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹார்ல்ஸ்டன் சாலையில் தங்கியிருந்து சதித்திட்டங்களை தீட்டியவர்களை கைதுசெய்துள்ளோம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here