உடலில் கெரசின் ஊற்றி மானத்தை காத்தார் பெண்!

0
0

பாகல்கோட்டை:பலாத்கார முயற்சியில் இருந்து தப்பிக்க உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார் ஒரு பெண்.

இப்பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதாமி நகரில்.  அந்நகரில் வசித்துவருபவர் நிலா(36). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

கணவர் இறந்த நிலையில் குழந்தைகளுடன் தனியே வசித்துவருகிறார் நிலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் பஜந்த்ரி அடிக்கடி நிலாவுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.  இரு தினங்களுக்கு முன் நிலா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்குவந்த சுரேஷ் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார்.

அவரிடம் இருந்து தப்பிக்க முகத்தில் கெரசின் ஊற்றி தீக்குளிக்கப்போவதாக நிலா மிரட்டினார்.

அவரிடம் இருந்த  கெரசின் கேனை பிடுங்கிய சுரேஷ், நிலாவின் உடல் முழுவதும் கெரசினை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார்.

பாகல்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 40சதவிகித தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார் நிலா. இவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here