பெண்ணுறுப்பே இல்லாமல் பிறந்த பெண்..! பிறப்பில் இது அரிது..!

0
2

அமெரிக்காவில் உள்ள ஒரு பெண்ணுக்கு பெண்ணுறுப்பே இல்லாமல் பிறந்திருப்பது தற்போது தான் தெரிய வந்துள்ளது. இது பிறப்பின் விந்தைகளில் ஒன்றாகும். மருத்துவ அறிவியலில் ஒரு அரிதான சான்றாகும்.

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் வசித்து வருபவர் கேலீ மோத்ஸ், அவருக்கு 22 வயது ஆகிறது. 18 வயது வரை இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் தான் அவருக்கு பெண்ணுறுப்பு இல்லாமல் வாழ்வது தெரிய வந்துள்ளது.

அது வரை அவர் பெண்ணுறுப்பு இல்லாமலேயே வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு பெண்ணுறுப்பு இல்லை என்பதும் தெரியவில்லை.


அவருக்கு வந்துள்ள இந்த பாதிப்பு 4500 பேர்களில் ஒருவருக்கு ஏற்படும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கேலீ மோத்ஸ்-க்கு வந்துள்ள பாதிப்பு Mayer Rokitansky K ster Hauser syndrome (MRKH) என்று அழைக்கப்படுகிறது.

உடலில் பெண்ணுறுப்புக்கான தடயம் மட்டுமே இருக்கும். ஆனால், உள்ளுறுப்புகளுடன் தொடர்பு கொள்ள திறப்பு இருக்காது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால்,ஒரு ஆபரேஷன் செய்தால் சரியாகும் என்றாலும் அதற்கு 15000 டாலர்கள் செலவாகும். ஆனாலும் வெற்றிக்கு 96சதவீதம் மட்டுமே வாய்ப்புகள் உள்ளதாம்.

கேலீ மோத்ஸ் சிறுக சிறுக 12000 டாலர்கள் சேர்த்துள்ளார். மேலும் வலைதள உதவியும் கோரியுள்ளார். GoFundMe என்ற கோரிக்கையுடன்,தனக்கு சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் பணம் சேர்த்து வருகிறார். பெற்றோரும் சகோதரிகளும் ஆதரவாக உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

அவரது காதலனுக்கு சொல்லாமல் மறைத்தாராம். ஆனால் கேள்விப்பட்ட காதலன்தான் இப்போது முழுமையான ஆதரவுடன்  இருகின்றார் என்று கேலீ மோத்ஸ் பெருமை கொள்கிறார்.

குழந்தை பெற்று தாய்மை அடைய ஆசைப்படுகிறேன். கடவுள் எனக்கு ஆசி
வழங்க வேண்டும் என்கிறார் கண்ணீருடன்,கேலீ மோத்ஸ்.

Related Topics : Health News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here