விவசாயிக்கு நண்பனான மீன்! ஆச்சர்ய விடியோ!!

விவசாயி ஒருவருக்கு மீன் நண்பராக உள்ளது.

ஆச்சரியமான இச்செய்தியை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மகராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த விவசாயி பிரகாஷ் பாட்டில்(54).

இவரது வயலின் பக்கத்து வயலில் கருப்பு நிற மீன் பலமாதம் இருந்து வந்தது.

மீன் பெரிதாக வளர்ந்ததால் பயிர்களை சேதப்படுத்துவதாக பிரகாஷிடம் அவர் நண்பர் முறையிட்டார்.

பிரகாஷ் அந்த மீனை பிடித்து வீட்டுக்கு வந்தார்.

வீட்டு தண்ணீர்தொட்டியில் அந்த மீனை வளர்த்து வந்தார். அதற்கு நாராயணா என்று பெயரிட்டார்.

5வேளை தினமும் உணவு அளித்ததில் மீன் வேகமாக வளர தொடங்கியது.

தண்ணீர் தொட்டியில் இடம் போதாது என்றளவுக்கு மீன் வளர்ந்ததால் அதனை அருகில் உள்ள குளத்தில் விட்டார் பிரகாஷ்பாட்டில்.

தற்போது தினமும் காலையில் குளக்கரைக்கு பிரகாஷ் பாட்டில் சென்றதும் அவரை தேடி வந்து  குஷியோடு நன்றி சொல்லி செல்கிறது அந்த மீன்.

About the author

Related

JOIN THE DISCUSSION