கணவனை மீட்டுத்தரக்கோரி பெண் சாலை மறியல்!

0
2

கிருஷ்ணகிரி: கணவனை கண்டுபிடித்து தரக்கோரி பெண் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சு. இவர் பெட்ரோல் பங்கில் வேலைபார்த்துவந்தார். அங்கு பெட்ரோல் நிரப்பவரும் பவித்ரனுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது.


ஆறுவருடம் காதலித்து கடந்த 15ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
சிலதினக்களுக்கு முன்னர் பவித்ரனை அவர் பெற்றோர் அழைத்துச்சென்றுவிட்டனர்.

தனிமரமாக நின்ற மஞ்சுவுக்கு, அவரது கணவருக்கு வேறு ஒருபெண்ணுடன் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் கிடைத்தது.


இதனால் மனம்நொந்த மஞ்சு கணவனை கண்டுபிடித்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதனால் திருப்பத்தூர்-போச்சம்பள்ளி சாலை இடையே சிலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் மஞ்சுவை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிட வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here