பதவி விலகியது ஏன்? கும்ப்ளே விளக்கம்

0
0

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா செய்துள்ளார்.

மேற்குஇந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து கும்ப்ளே ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று திடீரென அவர் ராஜினாமா செய்துள்ளார்.

கவாஸ்கர்,மதன்லால் உள்ளிட்ட பலர் கும்ப்ளே ராஜினாமா குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 விராட் கோலிக்கும் எனக்கும் இடையே இருந்த பிரச்சினைகளைத் தீர்க்க பிசிசிஐ முயன்றது.  அது பயனளிக்கவில்லை.

பிசிசிஐ நிர்வாகம் இதுகுறித்து என்னிடம் தெரிவித்தது.

கேப்டனுக்கு எனது பயிற்சிமுறை தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் இருந்தது தெரியவந்தது.

சமாதான முயற்சி  ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை.

எனவே நான் வெளியேறுவதுதான் சிறந்த முடிவு என்று கருதினேன்.

 தொழில்நேர்த்தி, கட்டுக்கோப்பு, கடமை உணர்வு, நேர்மை ஆகியவற்றை  அணியிடம் காட்டியுள்ளேன்.

ஒரு குழுவான செயல்பாடுகள் திறம்பட இவை மிகவும் அவசியம்.

கடந்த ஓராண்டில் அணி செய்த சாதனைகளின் பெருமைகள் கேப்டன், ஒட்டுமொத்த அணி, துணைப்பயிற்சியாளர்கள் ஆகியோரையே சாரும்.

மாற்றுக் கருத்துகள்’ அளித்த வெளிச்சத்தின் படி சிஏசி, மற்றும் பிசிசிஐ இந்தப் பொறுப்புக்கு பொருத்தமுடையவர்களை நியமிக்க உதவுமாறு நான் என் பொறுப்பை ஒப்படைப்பதே சிறந்தது என்று நம்புகிறேன்.

எண்ணற்ற ரசிகர்கள், இந்திய கிரிகெட்டை பின் தொடரும் எண்ணற்றோர் ஆகியோரது தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

என் நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் பாரம்பரியத்தின் நலம் விரும்பியாக நான் எப்போதும் இருப்பேன்.

இவ்வாறு அக்கடிதத்தில் கும்ப்ளே கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here