இலவச காண்டம்! அதிகம் பயன்படுத்துவது யார்!!

0
1

டெல்லி இந்தியாவில் அதிகமாக  இலவச  ஆணுறைக்கு வரவேற்புள்ள  மாநிலம் எது தெரியுமா?                                              சந்தேகமே இல்லை. குட்டி இந்தியாவாக பல்வேறு மொழி கலாச்சாரங்களை தன்னுள் கொண்டுள்ள கர்நாடகாவேதான்.
தேசிய எய்ட்ஸ் விழிப்புணர்வு அமைப்பு சமீபத்தில் சர்வே ஒன்றை எடுத்தது.
அதில் எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கான முக்கிய காரணியாக விளங்கும் ஆணுறைகள் எங்கெங்கு அதிகமாக இலவசமாக  தரப்படுகிறது என்று தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த சர்வேயில், 4.41லட்சம் காண்டம்கள் தனிநபர்களால் வாங்கப்பட்டுள்ளன.
கர்நாடகா, டெல்லியில் அதிகளவில் காண்டம்கள் வாங்கப்படுகின்றன.
எய்ட்ஸை தடுப்பதற்காக இலவசமாக காண்டம்களை மத்திய அரசு விநியோகிக்கிறது. தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆன்லைன் ஆகியவற்றில் இலவச காண்டம்கள் பெறும் வசதி உள்ளது.
அடுத்த ஆண்டு 20லட்சம் காண்டம்கள் விற்க தேசிய எய்ட்ஸ்நோய் கட்டுப்பாட்டு மையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
காண்டம்களை கடைகளுக்கு சென்று வாங்க இன்னமும் மக்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. ஆன்லைன் கடைகளில் பெண்களும் காண்டம் வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 5.6சதவீதம் பேர் குடும்பக்கட்டுப்பாட்டுக்காக ஆணுறைகள் பயன்படுத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் குடும்பக்கட்டுப்பாட்டுக்காக ஆணுறைகள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20% என்று அதிகளவில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here