கட்டண சேவை துவக்குகிறது வாட்ஸ் ஆப்!

வாட்ஸ் ஆப் இப்போது இலவசமாக சேவை அளித்து வருகிறது. ஓரிரு மாதங்களில் கட்டண சேவையை இந்நிறுவனம் துவக்க உள்ளது.

சாட்டிங் செய்வதற்காக பயன்படும் வாட்ஸ் ஆப் உலகம் முழுவதும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஆப் என்ற பெருமை பெற்றுள்ளது.

இப்பெருமையை தொடர்ந்து நிலைநிறுத்தவும், வருவாயை பெருக்கவும் திட்டமிட்டுள்ளது.

இளைஞர்கள்தான் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதில் முன்னணியில் இருக்கிறார்கள்.

அவர்களின் வருமானத்துக்கு வழிசெய்யும் வகையில் புதிய திட்டங்கள் அமைய வேண்டும் என்று வாட்ஸ் ஆப் திட்டமிடுகிறது.

தரகுத்தொழில், சிறு வியாபாரம், டாக்குமெண்ட் செய்வது போன்ற பிசினஸ்களுக்காக தனி அப்ளிகேஷன்கள் வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட உள்ளன.

இவை குறித்து ஆய்வுகள் மற்றும் வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறது.

2018ல் பிசினஸ் செய்வதற்கான அனைத்து தொடர்புகளுக்கும் வாட்ஸ் ஆப் போதும் என்ற நிலை உருவாகும்.

வாட்ஸ் ஆப்பில் தற்போது பிக்சர் இன் பிக்சர் என்ற வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஒரே நேரத்தில் ஒருவருடன் விடியோ சாட் செய்யவும், மெசேஜ் செய்யவும் முடியும்.

விடியோ சாட்டில் உள்ளவரது விண்டோவை சிறிதாக்கி நமது டிஸ்ப்ளேயில் எந்த இடத்திலும் வைக்கலாம்.

24மணிநேரம் தெரியும் வகையில் டெக்ஸ் அப்டேட் மெசேஜ்கள் அனுப்பும் வசதியும் தற்போது உள்ளது.

இதேபோன்று தவறுதலாக அனுப்பப்பட்ட மெசேஜ்களை அழிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வாட்ஸ் ஆப் குழு நிர்வாகிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

இவ்வசதியில் ஒரு மெசேஜ் தவறுதலாக பதியப்பட்டுவிட்டால் அதனை அட்மின் அழித்துவிடலாம்.

 

About the author

Related

JOIN THE DISCUSSION