அமித்ஷாவுக்கு ஷாக் தந்த தம்பதி

0
0

மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பா.ஜ.,வின் தேசிய தலைவர் அமித் ஷா.

அம்மாநிலத்தை சேர்ந்த நக்சல்பாரி என்ற ஊரில் உள்ள ராஜூமாஹாளி-கீதா தம்பதி மதியவிருந்து அளித்தனர்.
அவர்கள் வீட்டுக்கு தொண்டர்களுடன் சென்று விருந்து சாப்பிட்டார் அமித்ஷா.

கீதாவின் சமையலையும் புகழ்ந்தார் பாஜக தலைவர்.
அத்தம்பதிகளின் குழந்தையுடனும் பேசி மகிழ்ந்தார்.

இந்நிலையில் ராஜூமாஹாளி, கீதா ஆளும் கட்சியான திரினமுலில் சேர்ந்துள்ளனர்.
நக்சல்பாரி மாவட்ட திரினமுல் நிர்வாகிகள் முன்னிலையில் அவர்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.


அத்தம்பதியினரை கடத்திச்சென்று அடிபணிய வைத்துள்ளதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால், மம்தா பானர்ஜியை பிடித்துள்ளதால் அவரது கட்சிய்ல் சேர்ந்துள்ளோம்.
முதல்வர் மம்தா எங்கள் வீட்டுக்குவந்தால் விருந்து அளிப்போம் என்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here