நாங்களும் ரவுடிதான்! ரயிலில் கலாட்டா செய்த மாணவர்கள் கைது!! விடியோ!!!

நாங்களும் ரவுடிகள்தான் என்று ரயில் பயணிகளை பீதியடைய வைத்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது என்ற சட்டம் உள்ளது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மாணவர்கள் கத்தி, பட்டாசுகளுடன் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து, நெமிலிச்சேரி செல்லும் புறநகர் ரெயிலில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரது கண்டனத்தை பெற்றது.

ரயில் பயணிகளை அச்சுறுத்தும் கல்லூரி மாணவர்கள்

ரயில் பயணிகளை அச்சுறுத்தும் கல்லூரி மாணவர்கள், கண்டு கொள்ளாத ரயில்வே அதிகாரிகள்இதை எடுத்தவர்கள் இறுதியில் எழுதியுள்ள வாசகத்தை காவல் துறையினர் பார்த்தார்களா இல்லையா ?சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கம்

โพสต์โดย Livenews Tamil บน 8 ตุลาคม 2017

உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் ஆவடி அருகே ஆயுதங்களுடன் இருந்த 4கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.


பந்தாவுக்காக ரயிலில் கத்தியுடன் வந்தோம். எங்களை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று மாணவர்கள் கெஞ்சினர்.
இருப்பினும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரயிலில் கலாட்டா செய்த மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION