தினமும் ஒரு ஜிபி இலவசம்! வொடபோனும் களம் இறங்கியது!

0
2

டெல்லி: தினந்தோறும் ஒரு ஜிபி டேட்டா தரும் புதிய ரிசார்ஜ் ப்ளானை வொடாபோன் அறிமுகப்படுத்தியுள்ளது.
4ஜி சேவையை வழங்குவதில் அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
இதனால் கலக்கமுற்ற போட்டி நிறுவனங்கள் ஜியோவின் பாதையை பின்பற்ற தொடங்கியுள்ளன.


வாய்ஸ் காலிங் இலவசம், டேட்டாவுக்கு கட்டணம் என்று செல்போன் நிறுவனங்கள் புதிய ப்ளான்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

ரூ.509ப்ரிபெய்டு ப்ளானில், உள்ளூர், வெளியூர் அழைப்புகள் ரோமிங்கில் இருந்தாலும் இலவசம். தினமும் ஒரு ஜிபி டேட்டாவும் கிடைக்கும். தினமும் 250நிமிடங்கள் வாரத்துக்கு ஆயிரம் நிமிடங்கள் இதில் எது முதலில் எட்டப்படுகிறதோ அதுவரை சலுகை தொடரும். 3ஜி, 4ஜி சேவைகளுக்கு இத்திட்டம் பொருந்தும். 84நாட்கள் வாலிடிட்டி உடையது இத்திட்டம்.


இதே சலுகைகளுடன் ரூ.458க்கு ரீசார்ஜ் செய்து 70நாட்கள் வொடபோன் சேவை பெறலாம்.
இவ்விரு ரிசார்ஜ் திட்டத்தில் சேருவோர் வோடபோன் ப்ளே ஆப்பில் இலவசமாக உறுப்பினராகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here