தன்ஷிகாவுக்கு குரல் கொடுத்த விஷால்..!

0
2

நடிகை தன்ஷிகா மனம் நோக பேசிய டி.ராஜேந்தருக்கு நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.


‘விழித்திரு’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை தன்ஷிகா, டி.ராஜேந்தர் பெயரை மறதியாக சொல்லாமல் விட்டுவிட்டார். இடஹி டி.ராஜேந்தர் பெருந்தன்மையாக விட்டிருக்கலாம்.

ஆனால் அவர் கோபத்தில் மேடையிலேயே தன்ஷிகாவை கோபமாக பேசியுள்ளார். அதனால், தன்ஷிகா மேடையிலேயே அழத்தொடங்கி விட்டார்.

இந்த நிலையில், டி.ராஜேந்தருக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-
‘விழித்திரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது பெயரைச் சொல்ல மறந்துவிட்டார். அதற்காக, இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாகக் கண்டித்தார். ஆனால், தன்ஷிகா அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டார். ஆனாலும் டி.ஆர்  அத்தோடு  விடாமல் தொடர்ந்து காயப்படுத்தியுள்ளார் என்பதை நான் அறிந்தேன்.

டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பல திறமைகள் உடையவர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை
மறப்பது எசாதாரணமானது. நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரைக் கூட மறந்திருக்கிறேன்.

டி.ஆர். அவர்கள் சுட்டிக்காட்டிய பின்னர், சாய் தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அப்படி மன்னிப்புக் கேட்ட அவரது மகள்
வயதையொத்த சாய்தன்ஷிகாவைப் அவர் பெருந்தன்மையோடு மன்னித்திருக்க வேண்டும்.

ஆனால், மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டி.ஆர் போன்ற ஒரு படைப்பாளியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. திரையுலகில் ஒரு பெண் நடிகையாக உருவாகுவது எவ்வளவு சிரமம் என்பது அவருக்கு தெரியாதது அல்ல.

எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாகத் தெரியும். அவர் மற்றவர்களை அவமரியாதை செய்யும் குணம்கொண்டவர் அல்ல. சாய்தன்ஷிகா மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்திய டி.ஆர் அவர்களுக்கு நான் கண்டனம்  தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Topics : Cinema News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here