கிட்னி ஆபரேஷன் செய்ய பாக்., பெண்ணுக்கு விசா..! சுஷ்மா கரிசனம்..!

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானில் நோயுற்றவர்களுக்கு உதவுவது இது முதல் முறை அல்ல. பலருக்கு இந்தியா வந்து சிகிச்சை பெற உதவி இருக்கிறார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பெண் ஒருவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கடைசி காட்டத்தில் இருக்கிறார்.

அவருக்கு மருத்துவ சிகிச்சை பெற அவரது கணவர் கஃப்பார் கான் விசாவுக்கு விண்ணப்பம் செய்து இருந்தார். பின்னர் அதை அமைச்சரின் ட்விட்டரிலும் பதிவு
செய்தார்.

அதற்கு உடனே பதில் அளித்துள்ள அமைச்சர் சுஷ்மா, சிறுநீரக சிகிச்சைக்கு விசா அளிப்பதாக அவருக்கு பதில் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஏழு வயது பாகிஸ்தான் சிறுமிக்கு ஓபன் ஹார்ட் ஆபரேஷன் செய்வதற்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏ.டி.எம்., கார்டு லாக் ஆனதால் காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுத்த ரஷ்ய பயணி குறித்து அறிந்த அமைச்சர் அவருக்கு தேவையான உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

Related Topics : International News

About the author

Related

JOIN THE DISCUSSION