இணையத்தில் வலம் வரும் கோலி-அனுஷ்கா ஜோடியின் புதிய புகைப்படம்…!

விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா இவர்களின் காதல் ததும்பும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ‘விராட் கோலி’, இந்தி நடிகை ‘அனுஷ்கா ஷர்மா’ ஆகிய இருவரும் காதலித்து வருகின்றனர்.
இவர்கள் விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக செல்வது வழக்கம்.

‘விராட்கோலி’ வெளிநாடுகளுக்கு விளையாடச் சென்றால் அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக அனுஷ்காவும் உடன் சென்றுவிடுவார்.

இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது போல் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வந்து பரபரப்பை ஏற்படுத்தும்.

இந்நிலையில் அனுஷ்கா,விராட் விளம்பரம் ஒன்றில் சேர்ந்து நடிக்கின்றனர். இந்த விளம்பரத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.

இந்த விளம்பரத்தில் ஒருவரை ஒருவர் காதலோடு பார்ப்பதுபோல் நடித்துள்ளனர். அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

About the author

Related

JOIN THE DISCUSSION