சசிகலாவுக்கான வி.ஐ.பி., சலுகை இன்னும் தொடர்கிறது..! சிறை சர்ச்சை..!

கர்நாடக மாநிலம், பெங்களூரு மத்திய சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கான வி.ஐ.பி., சலுகை இன்னும் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே, சசிகலாவுக்கு சிறையில் பல சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்த புகாரில் சிறைத்துறை டி.ஐ.ஜி.,ரூபா பல ஆதாரங்களை சமர்ப்பித்தார். ஆனாலும், அது, கொஞ்ச நாட்கள் மட்டுமே நீடித்தது.

தற்போது சசிகலா, கட்சிப் பதவியில் இருந்து பொதுக் குழு உறுப்பினர்களால் நீக்கப்பட்ட பின்னரும் சிறையில் சசிகலாவுக்கான வி.ஐ.பி., சலுகை தொடர்ந்து வருகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது வெளியாகியுள்ளது. மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் தினசரி வேலை சசிகலாவுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

 


தற்போது ஒரு கட்சியின் பொதுச் செயலாளரும் அவர் இல்லை. ஜெயலலிதா நியமித்த நியமனங்கள் மட்டுமே இனிமேல் செயலாற்றும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் பதவியும் செல்லாது போய்விடும் என்கிறார்கள்.

Related Topics : Tamilnadu News

 

About the author

Related

JOIN THE DISCUSSION