பெண் வேடத்தில் விஜய் சேதுபதி..!?

தமிழ் படங்களில் பல முன்னணி நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்துள்ளனர். ஆனால் அந்த வேடம் எல்லோருக்கும் பொருந்துவதில்லை. தமிழ் சினிமாவை பொறுத்த வரை கமல்ஹாசனுக்கு பெண் வேடம் நன்றாக பொருந்துவதுடன், அவர் நடிப்பிலும் வெளுத்து வாங்குபவர்.

அதே போல பிரஷாந்த்-க்கும் பெண் வேடம் கச்சிதமாக பொருந்தியது. தற்போது விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடிக்க இருப்பதாக படம் ஒன்று வெளியாகியுள்ளது.

‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாராஜா குமாரராஜா தற்போது அநீதி கதைகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. அவருடன் அந்த படத்தில் சமந்தா, பகத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர்.

 

இந்நிலையில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்கும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

அவருக்கு அந்த பெண் வேடம் நன்றாக பொருந்தி உள்ளது. அந்த படத்தில் அவர் திருநங்கையாக நடிக்க உள்ளாரா அல்லது பெண் வேடத்தில் நடிக்கிறாரா என்பது படம் வெளி வந்த பின்னர் தெரியும்.

Related Topics: Cinema News

 

About the author

Related

JOIN THE DISCUSSION