விஜயகாந்த் மீதான ‘தூ’ வழக்கு வாபஸ்

0
0

பத்திரிகையாளர் சந்திப்பின்போது நடந்துகொண்ட விதம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளார் விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் கடந்த 27.12.15 அன்று சென்னை அடையாறில் நடைபெற்ற ரத்ததான முகாமை துவக்கிவைத்தார்.
அப்போது நடந்த நிருபர்கள் சந்திப்பின்போது,
2016ல் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்குமா?’ என, ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா? உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா?’ என கூறினார் விஜயகாந்த்.
திடீரென பத்திரிகையாளர்களை நோக்கி காரித் துப்பினார்.

மற்றொரு சம்பவம்: தேமுதிக வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக 21.04.16 அன்று சேலம் சென்றார் விஜயகாந்த்.
அங்கு கூட்ட நெரிசலில் தன்னிடம் கேள்வி கேட்க முயன்ற பத்திரிகையாளர்களை நோக்கி மிரட்டும் தொனியில் பேசினார்.
இதுதொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சில் சார்பில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

அதற்கு பதில் அனுப்பியிருந்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களிடம் நடந்து கொண்ட முறைக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவர்மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here