2வது முறையாக விஜய் மல்லையா கைதாகி விடுதலை!

0
0

லண்டனில் வசித்துவரும் தொழிலதிபர் விஜய் மல்லையா கைதாகி மீண்டும் விடுதலை செய்யப்பட்டார்.

யூபி குழுமத்தை நடத்திவரும் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் கடந்த பிப்ரவரி மாதம் லண்டனுக்கு தப்பிச்சென்றார்.

அவரை நாடுகடத்த வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ஐரோப்பிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமலாக்கப்பிரிவு, சிபிஐ ஆகியவை அவர் மீது தனித்தனியாக வழக்குகள் பதிந்து விசாரித்து வருகின்றன.

மல்லையா ரூ.6000கோடியை போலியான கம்பெனிகள் பெயரில் வாங்கி முறைகேடாக பயன்படுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.

அமலாக்கப்பிரிவு லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவர் கடந்த ஏப்ரல் மாதம் கைதாகி விடுவிக்கப்பட்டார்.

அமலாக்கப்பிரிவின் மற்றொரு மோசடி வழக்கில் அவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நான் மோசடி ஏதும் செய்யவில்லை. என்மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது என்று மல்லையா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மல்லையாவை இந்தியாவுக்கு திரும்ப அனுப்புவது தொடர்பான வழக்கு வேறொரு நீதிமன்றத்தில் நடந்துவருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

டிசம்பர் மாதம் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here