விக்டோரியா மகாராணியின் ரகசிய உறவு, சினிமாவாகிறது..!

0
5

இங்கிலாந்தின் முன்னாள் மகாராணி விக்டோரியா மற்றும் அவரது இந்திய பணியாளர் அப்துல் கரீம் ஆகியோருக்கிடையிலான உறவு குறித்த சம்பவங்களை ஸ்டீபன் ஃபிரியர்ஸ் என்பவர் திரைப்படமாக இயக்கியுள்ளார்.

1837ம் ஆண்டு முதல் 1876வரை விக்டோரியா இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் மகாராணியாக இருந்தார். அறிவுக்கூர்மையும், தைரியமும் நிறைந்த பெண்ணாக சிறப்பான ஆட்சியை தந்தவர்.

விக்டோரியா மகாராணிக்கும், இந்தியாவை சேர்ந்த பணியாளர் அப்துல் கரீமுக்கும் இடையிலான உறவு குறித்து திரைப்படம் வர உள்ளது. செப்டம்பர் மாதம் 22ம் தேதி வெளிவர உள்ள இந்த படத்தின் பெயர் ‘விக்டோரியா அண்ட் அப்துல்’
விக்டோரியா மகாராணியின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகத்தை ஸ்ராபாணி பாசு என்பவர் எழுதியுள்ளார்.

மகாராணியின் டைரியில் அனைத்து உண்மைகளும் எழுதப்பட்டிருந்தாலும் அவைகள் வெளி உலகத்திற்கு மறைக்கப்பட்டுள்ளன.மகாராணிக்கும்,அப்துல் கரீமுக்குமான உறவும் மறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த கரீம் அறிவு கூர்மை உள்ளவர் என்பதால் அவரை மகாராணி தனது ஆசிரியராக நியமித்துக்கொண்டுள்ளார். மேலும், நல்ல உயரமான ஆண்கள் தன் அருகில் இருப்பதை விக்டோரியா மகாராணி மிகவும் விரும்புவார்.

மேலும் அப்துல் கரீம் எப்போதும் மகாராணியுடனேயே இருப்பார். மகாராணி எழுதிய கடிதங்களில் கூட அன்பு முத்தங்கள், தாய் மற்றும் உன் அன்பு தோழி என்றெல்லாம் விளித்திருப்பார்.

இவர்களுக்கிடையேயான உறவு குறித்து விக்டோரியாவின் மூத்த மகன் எட்வர்ட் (Edward-vii) அதிகம் கவலைப்பட்டுள்ளார். அதனாலேயே டைரியில் இருந்த உண்மைகளை மறைத்துவிட்டார்.


தற்போது அவர்களுக்கிடையேயான உறவு குறித்த திரைப்படம் செப்.22ம் தேதி வெளிவருகிறது.

Related Topics : International News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here