வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நிற்காததால் கைகலப்பு..!

0
0

மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாநகராட்சி மன்ற கூட்டத்தில், ‘வந்தே மாதரம்’ பாடியபோது, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியினர்  எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருந்ததால் கைகலப்பு ஏற்பட்டது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு  அவுரங்காபாத் மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தின் துவக்கத்தில், ‘வந்தே மாதரம்’ தேசிய பாடல் பாடப்பட்டது. அப்போது ஏ.ஐ.எம்.ஐ.எம்., எனப்படும், அகில இந்திய மஜிலிஸ் –  இ – இத்தேஹதுல் முஸ்லிமின் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் எழுந்து நிற்க மறுத்தனர்.

பாடல் முடிந்ததும், பா.ஜ., – சிவசேனா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். ஏ.ஐ.எம்.ஐ.எம்., உறுப்பினர்களுடன்  பா.ஜ., – சிவசேனா உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் மாநராட்சி அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் மாநகராட்சி மேயர் ஏ.ஐ.எம்.ஐ.எம்-ஐ சேர்ந்த இரண்டு உறுப்பினர்களையும் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here