வைரமுத்து நாக்குக்கு ரூ.10கோடி! கட்டிங் கலாச்சாரத்தை துவக்கியது பாஜக!!

0
1

சென்னை: கவிஞர் வைரமுத்து  ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதற்கு உலகம் முழுவதும் வைஷ்ணவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வைரமுத்து ஆண்டாள் சந்நிதிக்கு வந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் போராட்டம் துவங்கியுள்ளார்.

இந்நிலையில், பாஜகவில் சமீபத்தில் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்  கவிஞரின் நாக்கை அறுத்தால் ரூ.10கோடி பரிசு என்று அறிவித்துள்ளார்.

வைரமுத்துவை கண்டித்து நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,

ஆர்.கே.நகர் தோல்வியை மறைக்கவே, வைரமுத்து போன்றோரை திமுக தூண்டிவிடுகிறது.

கவிஞர் வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தர தொண்டர்கள் தயாராக உள்ளனர்.
வருங்காலங்களில் இந்துக்களை பழித்து பேசினால் கொலைசெய்யவும் தயாராகுங்கள் என கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here