ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு தலைவர்கள் கடும் கண்டனம்!!

தமிழகத்தில் 110 இடங்களில் புதிதாக எண்ணெய்க்கிணறு அமைக்க திட்டமிட்டுவரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக தலைவர்கள் குரல்கொடுக்க தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் 110 எண்ணெய்க்கிணறுகள் நிறுவ ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உறுதியாக உள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தில் இயக்குநர் பேட்டியளித்துள்ளார்.
இதற்கு பாமக, மதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,

கதிராமங்கலம் மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது.
அக்கிராமத்திலிருந்து வெளியேறப் போவதில்லை என்ற அடுத்தக்கட்ட குண்டை ஓ.என்.ஜி.சி நிறுவனம் வீசியிருக்கிறது.
இது அறிவிக்கப்படாத போர்.


இத்திட்டத்தால் காவிரி பாசனமாவட்டங்கள் பாலை நிலங்களாகும்.
மக்கள் நலனை அழித்து வருவாயை பெருக்கும் தனியார் நிறுவனம்போன்று மத்திய அரசு நிறுவனம் நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டி:
கதிராமங்கலத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. வாகனங்கள் வெளியேறாவிட்டால் அவற்றை அடித்து நொறுக்குவோம்.

தமிழகத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற பாடுபடுவேன்.

ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கூறுவதுபோல், கதிராமங்கலத்தில் போராட்டத்தை நான்தான் தூண்டிவிடுகிறேன். என் மீது வழக்குபோட்டால் அதை எதிர்கொள்வேன்.
இவ்வாறு வைகோ பேட்டியளித்துள்ளார்.

About the author

Related

JOIN THE DISCUSSION