ராசியில்லாத தலைவனா நான்? வைகோ விளக்கம்!

0
0

சென்னை: தான் ஒரு ராசியில்லாத தலைவரா என்பது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
வைகோ அமைத்த மூன்றாவது அணி முயற்சி தோல்வியில் முடிந்தது. தற்போது திமுகவுடன் நெருக்கம் காட்டுகிறார். திமுக ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் இழந்தது. இதனைத்தொடர்ந்து அவர் ராசியில்லாத தலைவர் என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறார்.

 

இதுதொடர்பாக, சென்னையில் அவரளித்த பேட்டியின்போது கூறியதாவது:
சமூக வலைதளங்களில் அதிகமாக நிந்திக்கப்படுகிறவனும், விமர்சிக்கப்படுகிறவனும் நான் தான்.
சிலர் திட்டமிட்டுக் கொண்டு என்னை கேலி செய்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பரப்பி வருகின்றனர்.


இந்த எளியவன் வந்து பிரச்சாரம் செய்தால் தான் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று கருணாநிதி நீதிமன்றத்தில் வந்து எனக்காக காத்திருந்தார்.
61 நாட்கள் சிறப்பான பிரச்சாரம் செய்திருக்கிறேன் 2 முறை என்னை சிறையில் வந்து அவர் இது தொடர்பாக சந்தித்து விட்டு சென்றிருக்கிறார்.


61 நாட்கள் தமிழகம் முழுவதும் இந்த கறுப்பு துண்டுக்காரன் பிரச்சாரம் தான் 40 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியை தேடித் தந்தது என்று இந்து நாளேடு சிறப்பு செய்தியை பிரசுரித்திருந்தது. 1998ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்த போதும், 1999ல் திமுகவுடன் கூட்டணி அமைத்தபோதும் அக்கூட்டணிகள் வெற்றிபெற்றன.

திமுகவில் எளியவனான நான் தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த போது தான் மயிலாடுதுறை தொகுதியில் வெற்றியை பெற்றத் தந்தேன் என்று கருணாநிதி என்னை தனியாக அழைத்து பாராட்டினார். நான் தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்தத போது தான் முதன்முதலில் திமுக ஆட்சிக்கு வந்தது. இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here