ஆம்புலன்ஸ் மறுப்பு: உ.பி.யில் தொடரும் அவலம்

0
0

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் இறந்த குடும்பத்தினரின் உடலை வீட்டுக்கு ஸ்கூட்டர், சைக்கிள், மாட்டுவண்டியில் எடுத்துவரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள பாக்பத் நகரில் இதுபோன்ற சோகம் நடந்துள்ளது.

பாக்பத்தை சேர்ந்த விவசாயி இக்பால்.

இவரது 9வயது மகள் ரேஷ்மா(9). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரேஷ்மாவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார் இக்பால்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ரேஷ்மாவின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்துதர மறுத்தனர்.

இதனால் மகளின் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்துவந்துள்ளார் இக்பால்.

அம்மருத்துவமனையில் தீக்காயம் பட்ட ஒரு பெண்ணை சிகிச்சைக்கு அழைத்துவர ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது.

இதனால் உறவினர் காரில் அப்பெண் அழைத்துவரப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here