முட்டை ஓட்டை வீசாதீர்கள்..! முக அழகை மெருகூட்டும் அதிசயம்..!!

வீட்டில் முட்டையை பயன்படுத்தி விட்டு முட்டை ஓட்டை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் இனிமேல் அப்படி தூக்கி எறியாதீர்கள். ஏனெனில் முட்டை ஓட்டில் பல நன்மைகள் உள்ளது.

முட்டை ஓட்டை பயன்படுத்துவது எப்படி?

முட்டையின் ஓட்டை சுத்தமாக கழுவி, பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு 10-15 நிமிடங்கள் வரை வறுப்பது போல வெப்பமாக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது முட்டை ஓட்டில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

பின் அந்த முட்டை பொடியை எடுத்து, அதனுடன் மற்றொரு முட்டையை உடைத்து அதிலுள்ள வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்து அதை முட்டை ஓட்டின் பொடியுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

 

பேஸ்ட் பதத்தில் வந்ததும் அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்திற்கு ஈரப்பதம் கிடைப்பதுடன், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

 

முகத்தின் சுருக்கம் மறைய

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைவதற்கு, முட்டையின் ஓட்டை பொடியாக்கிக் அதனுடன் தயிர் 2 டேபிள் ஸ்பூன் கலந்து முகத்தில் தடவி காய வைத்து கழுவ வேண்டும்.

 

சரும அரிப்பு நீங்க

சருமத்தில் உள்ள அலர்ஜி, அரிப்புகள் குணமாக, முட்டை பொடியை வினிகரில் கலந்து 5 மணி நேரம் ஊற வைத்து, பின் மெல்லிய துணி அல்லது காட்டன் பஞ்சு பயன்படுத்தி, அந்த கலவையை தொட்டு அலர்ஜி வந்த இடத்தில் தடவ வேண்டும்.

கண்களின் கருவளையம் மறைய

கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய, முட்டை ஓட்டின் பொடியில் 2 டீஸ்பூன் எடுத்து அதை தேனுடன் கலந்து தினமும் கண்களைச் சுற்றி தடவி, மசாஜ் செய்ய வேண்டும். கரு வளையம் மறைந்து விடும்.

மிருதுவான சருமத்தை பெற

முட்டை ஓட்டின் பொடியுடன் கற்றாழை ஜெல் மற்றும் தேன் 1 டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி, வந்தால் சருமம் மிருதுவாகும். இதை வாரம் 2 முறை செய்ய வேண்டும்.

பற்களின் மஞ்சள் கறை நீங்க

தினமும் பல் விலக்கிய பின் முட்டை ஓட்டின் பொடியை, பற்களில் தேய்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். முட்டை ஓட்டு பொடியில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் மஞ்சள் கறை நீங்கிவிடும்.

Related Topics : Health News

About the author

Related

JOIN THE DISCUSSION