கரப்பான் பூச்சி விற்று லட்சாதிபதியான மாணவர்!

0
0

கரப்பான் பூச்சிகளை விற்று லட்சாதிபதியாகி உள்ளார் ஒரு மாணவர்.
தைவான் பல்கலைக்கழக மாணவர் டாங்க்.
விலங்கியல் படித்துவரும் டாங்க், வீட்டில் கோழி, பூனை வளர்த்துவருகிறார்.
அவற்றுக்கு கரப்பான் பூச்சிகளை உணவாக கொடுப்பது வழக்கம்.

இதனால் அதிக எண்ணிக்கையில் கரப்பான் பூச்சிகள் தேவைப்பட்டன.
விளையாட்டாக அவற்றை வளர்க்க தொடங்கினார் டாங்க்.
நூற்றுக்கணக்கில் கரப்பான் பூச்சிகள் அவர் அறையில் பெருகின.
அவற்றை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வாங்கி செல்ல ஆரம்பித்தனர்.

இதனையே தொழிலாக மாற்றிவிட்டார் டாங்க்.
தற்போது 50ஆயிரம் கரப்பான் பூச்சிகளுக்கு அதிபராகி உள்ளார்.
தினந்தோறும் நூற்றுக்கணக்கான பூச்சிகளை விற்கிறார்.
இதனால் லட்சாதிபதியாகி விட்டார்.

தைவான், சீனாவில் பாரம்பரிய மருத்துவத்தில் கரப்பான் பூச்சிகள் பயன்படுகின்றன.
அங்குள்ள கிராமங்களில் இப்பூச்சிகளை நன்கு வறுத்து உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here