உள்ளாடை அணிந்தால் முதுகுவலி வராது! – விடியோ!!

0
0

முதுகுவலி வராமல் இருப்பதற்காக நவீன உள்ளாடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும்பேர் 80சதவீதம்பேர் முதுகுவலியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


வயது, எலும்புத்தேய்மானம் மட்டுமின்றி பல்வேறு காரணங்களால் முதுகுவலி வருகிறது.
இதனால் தொழில்துறை பெரிதும் பாதிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் மட்டுமே முதுகுவலியால் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாவதால் 100பில்லியன் டாலர் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.


இப்பிரச்சனைக்கு தீர்வுகாண வண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கார்ல் செலிக் முயற்சி செய்தார்.
2 ஆண்டு தீவிர முயற்சிக்குப்பின்னர் முதுகுவலியைப்போக்கும் உள்ளாடைகளை கண்டறிந்தார்.


ஹாலிவுட் திரைப்படத்தில் தோன்றும் சூப்பர்மேன் படத்தை பார்த்து உந்துதல் கிடைத்து இந்த ஆடையை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆடையை அணிவதால் தசைகளில் ஏற்படும் இறுக்கம் தவிர்க்கப்படுகிறது.
இதனால் முதுகுவலி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இந்த ஆடையை இதற்கான ஆப்-புடன் இணைக்கலாம்.                                                                                              இதனால் எந்நேரங்களில் நாம் தவறான போசில் இருக்கிறோம் என்று தெரியவந்து அதனை தவிர்த்து முதுகுவலி வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here