எனது பறக்கும் கனவு நிறைவேறியது: மோடி பெருமிதம்

0
0

எனது பறக்கும் கனவு நிறைவேறியுள்ளது என்று தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

உதான் என்ற விமானப்பயண திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது.

இத்திட்டத்தில், 2ம்நிலை, 3ம் நிலை நகரங்களில் விமான சேவை தொடங்கப்படும்.

டெல்லியில் இருந்து ஷிம்லாவுக்கும், ஹைதராபாத்தில் இருந்து கடப்பா, நாண்டட் நகரங்களுக்கு இடையே இவ்விமான சேவையை பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பிரதமர் பேசியது:
சாதாரண செருப்பு அணிந்தவரும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று ஆசைகொண்டிருந்தேன்.
அக்கனவு இன்று நிறைவேறியிருக்கிறது.
விமானக்கொள்கை வகுக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.


நடுத்தர மக்கள் வாழ்வில் ஏற்படும் முன்னேற்றம் அவர்களது ஆசைகளையும் அதிகரிக்க வைத்துள்ளது.
அவர்களது விமானப்பயண ஆசை நிறைவேறும் வகையில் உதான் திட்டம் உள்ளது.
2ம் நிலை, 3ம் நிலையில் வளர்ந்துவரும் நகரங்களில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே அந்நகரங்களில் விமான சேவை அவசியம்.

உதான் திட்டத்தின் கீழ் 128 வழித்தடங்களில், 70 விமான நிலையங்களில் விமான சேவை நடைபெறும்.
ஒரு மணிநேர பயணத்துக்கு ரூ.2500 என்ற அளவில் விமானக்கட்டணம் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here