அமீரகத்தில் 7வயது போலீஸ்காரர்! விடியோ!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் 7வயதான போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் வாகனங்களை ஒழுங்குபடுத்தினார்.

இச்சம்பவம் அந்நாட்டில் உள்ள ரஸ் அல் கமியா நகரில் நடந்தது.

அந்நகரை சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் 7வயது மகன் அப்துல்லா அல் கத்பி.

இச்சிறுவன் ஒழுக்கமாகவும், கட்டுப்பாடாகவும் வளரவேண்டும். போலீஸ்காரர்களைப்போன்று நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.

காரில் செல்லும்போது போக்குவரத்து போலீஸ்காரர்களை உதாரணமாக காட்டுவார்.

இதனைத்தொடர்ந்து தானும் போலீசாக வேண்டும் என்று அச்சிறுவன் விரும்பினான். இதுகுறித்து அல் கமியா நகரில் உள்ள காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதினான்.

அதிகாரிகள் அச்சிறுவனை அழைத்து போக்குவரத்து குறித்து சிறப்பு பயிற்சி அளித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை போலீஸ்காரரைப்போன்று உடையணிந்து அச்சிறுவன் அல்கமியா நகரில் போக்குவரத்தை ஒழுங்கு செய்தான்.

இதனைப்பார்த்த உள்ளூர்வாசிகள் மகிழ்ந்து டுவிட்டரில் அச்சிறுவனை பாராட்டியுள்ளனர்.

காவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி இதனால் குறையும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION