எரிகிற தீயில் ட்ரம்ப் எண்ணெய் ஊற்றுகிறார்..! வடகொரியா குற்றச்சாட்டு..!

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல அமெரிக்க அதிபர் பேசி வருவதற்கு நாங்கள் சரியான பதிலடி கொடுப்போம் என்று வட கொரியா எச்சரித்துள்ளது.

வட கொரியா தொடர்ந்து அணு ஏவுகணைச் சோதனைகளை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது. வட கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வட கொரிய வெளியுறவு அமைச்சர் ரி யாங் ஹோ பேட்டி அளித்து இருந்தார். அவர் கூறும்போது:-

‘வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் எல்லாம் மிகவும் பாதுகாப்பு மிகுந்தவை. எங்களால் கிழக்கு ஆசிய பகுதியில் ஒரு போதும் அமைதிக்கு பங்கம் ஏற்படாது. அது குறித்து நாம் பேசவும் தேவை இல்லை.

ஆனால், போரைத் துாண்டும் வகையில் எங்களை சீண்டுவதற்காகவே, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி வருகிறார். அந்த பிரச்னைக்கு நாங்கள் தீர்வு காண விரும்புகிறோம்.

அந்த தேர்வு அமெரிக்காவுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கும். டிரம்ப், அமெரிக்காவின் தீயசக்தியாக விளங்குகிறார்.


அவரது பேசும் பேச்சுக்கள், அவர் செய்யும் விமர்சனங்கள் எல்லாம் எரிகிறநெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் உள்ளது. அவ்வாறு பேசுவதை கேட்டுக்கொண்டும் இருக்க முடியாது.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Topics : International News

 

About the author

Related

JOIN THE DISCUSSION