முத்தலாக் முறையை எதிர்த்தபெண் பாஜகவில் சேர்ந்தார்!!

0
2

அசாம்:முத்தலாக் நடைமுறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்த பெண் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

முஸ்லிம் மதத்தினர் விவாகரத்து செய்வதற்கு மூன்றுமுறை தலாக் என்று கூறி பிரிந்துவிடுகின்றனர்.


இந்நடைமுறையால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட ஐந்து பெண்கள் உச்சநீதிமன்றத்தில் இந்நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குத்தொடர்ந்தனர்.


அவர்களில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இஸ்ரத் ஜஹனும் ஒருவர்.
உச்சநீதிமன்றத்தில் இவர் வழக்கு தொடர்ந்ததும் இவருக்கு கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்தனர்.
உறவினர்கள் வழக்கை வாபஸ் பெற்றுவிடு என்று வற்புறுத்தினர்.


இஸ்ரத்தின் வீட்டு மின் சப்ளை, குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டது.
வழக்கில் இஸ்ரத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததும் அவரது வீடு தாக்குதலுக்குள்ளானது. அப்பகுதியில் குடியிருக்கும் யாரும் அவருடன் பேசுவதில்லை. கடந்த ஈத் பண்டிகையின்போது ஒருவர் கூட அவருக்கு வாழ்த்து சொல்லவில்லை.


அன்றாடச்செலவுக்கு கூட பணமில்லாத நிலையில் பாஜக மகளிரணி தலைவி லாக்கட் சாட்டர்ஜி இவருக்கு உதவ முன்வந்தார்.
மத்திய அரசு உதவியுடன் இஸ்ரத்துக்கு வேலை கிடைத்தது. கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here