முத்தலாக் விஷயத்தில் பாஜக அரசியல்

0
2

முத்தலாக் விஷயத்தில் பாரதியஜனதா கட்சி அரசியல் செய்துவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

டெல்லியில் நடைபெற்ற பசவ ஜெயந்தி விழாவில் பேசிய பிரதமர், முத்தலாக் விஷயத்தில் அரசியல் செய்யவேண்டாம் என்று கட்சிகளை கேட்டுக்கொண்டார்.

ஹைதரபாத்தில் இன்று பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இக்கருத்தை வலியுறுத்தினார்.
பெண்கள் சுயமரியாதை, வாழ்வுரிமை, சம்பந்தப்பட்ட விஷயம் முத்தலாக்.
இதனை அரசியல்வாதிகள் பயன்படுத்தி எதிர்மறை அரசியலில் ஈடுபடவேண்டாம் என்றார்.

இதற்கு பதிலடி தரும்வகையில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத்,
முஸ்லிம் தம்பதிகள் இடையே பிளவை உருவாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
இப்பிரச்சனையை பயன்படுத்தி வாக்குவங்கி உருவாக்க முயற்சிக்கிறது என்றார்.

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆசாம்கான் கூறுகையில், பாஜகதான் முத்தலாக் விஷயத்தில் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார்.
முஸ்லிம் பெண்கள் பசுப்பாதுகாப்பு படையால் தங்கள் கணவர்களை இழந்துள்ளனர். அவர்களைப்பற்றியும் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here