இளம்பெண் பலாத்காரம்! விடியோ எடுத்த துரியோதணர் கூட்டம்!!

பொதுமக்கள் முன்னிலையில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை ஒடிசாவில் நடந்துள்ளது.
மல்கங்கிரி மாவட்டம் மலைகிராமம் உடுப்பா.
அங்குள்ள பெண் ஒருவர் சந்தைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது வழியில் வந்த ஒருவர் அப்பெண்ணை தாக்கினார்.
சாலையோரம் உள்ள வயல்பகுதிக்கு இழுத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

அச்சாலைவழியாக வந்த பலரும் அப்பெண்ணின் கூக்குரலுக்கு செவிமடுக்கவில்லை.
ஒரு சிலர் விடியோ எடுத்துள்ளனர்.
இவ்விபரம் தெரியவந்த அப்பெண்ணின் கணவர் மற்றும் சிலர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அப்பெண்ணை பலாத்காரம் செய்தவரை தாக்கினர்.
இதுகுறித்து சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகின.

விழித்துக்கொண்ட காவல்துறை மனிதமிருகத்தை கைதுசெய்துள்ளது.
விசாரணை தொடர்வதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜக்மோகன் மீனா தெரிவித்துள்ளார்.

About the author

Related

JOIN THE DISCUSSION