திப்புசுல்தான் மீது பகிரங்க குற்றச்சாட்டு! மத்திய அமைச்சர் கருத்தால் சர்ச்சை!!

0
0

திப்புசுல்தான்  பல பெண்களை பலாத்காரம் செய்தவர் என்று    பகிரங்கமாக குற்றம்சாட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே.
கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.


இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நவம்பர்10ம் தேதி கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 

 

இந்நிலையில், மத்திய தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே மாநில அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அதில், திப்புசுல்தான் விழாவில் எனது பெயரை பயன்படுத்த வேண்டாம்.
விழாவுக்கும் என்னை அழைக்க வேண்டாம்.
18ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட திப்புசுல்தான் கொலைகாரன், கொடூரமானவர், பெண்களின் வாழ்வை சீரழித்தவர் என்று அமைச்சர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இவ்விவகாரம் குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில்,
அனந்தகுமார் ஹெக்டேவும் அரசின் ஒரு அங்கம், திப்புசுல்தான் விழா அனைத்து மக்கள் பிரதிநிதிகள், தலைவர்களுக்கு அளிக்கப்படும்.
விழாவில் பங்கேற்பது, பங்கேற்காதது அவர்களது விருப்பம்.
திப்புசுல்தான் மீது கூறப்படும் அவதூறு குற்றச்சாட்டு தவறானது.
அவர் பிரிட்டிஷ் அரசுடன் 4முறை போரிட்டவர் என்றார்.

2016ம் ஆண்டு திப்பு ஜெயந்தி விழாவை தடுத்ததற்காக அனந்த்குமார் ஹெக்டே கைதாகி விடுதலையானார்.
இம்முறை அமைச்சரான பின்னர் அவர் திப்புவை விமர்சித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
திப்புசுல்தான் கன்னடமொழி, இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here