சல்மான்கான் திரைப்படத்துக்கு திடீர் எதிர்ப்பு!

0
0

மும்பை: பத்மாவதி திரைப்படத்தை தொடர்ந்து மற்றொரு இந்தி திரைப்படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.
சல்மான்கான் நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் டைகர் ஜிந்தாஹை! இப்படம் இம்மாதம் 22ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிர நவநிர்மான் சித்ரபதசேனா அமைப்பினர் இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்திப்படங்கள் அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொள்கின்றன.


அவை பிரமாண்டம், ஆக்‌ஷன், கிளுகிளு நடனம் என்று படத்தை முடித்துவிடுகின்றன. இதற்காக கோடிகோடியாக பணம் கொட்டப்படுகிறது.
இதனால் மாநிலத்தைச்சேர்ந்த மராட்டிய சினிமா தொழில் பாதிக்கப்படுகிறது. மராட்டிய நடிகர்கள், அவர்களது திரைப்படங்கள் இரண்டாவது ரிலீசுக்கு கூட தியேட்டர்களில் இடம் கிடைக்காமல் பெட்டிக்குள் முடங்கும் நிலைமை உருவாகி உள்ளது.


இந்த வாரம் மராட்டிய மொழியில் தயாராகிய தேவா, கச்சி ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவித்திருந்தன. ஆனால், தியேட்டர் உரிமையாளர்கள் வருவாயை கருத்தில்கொண்டு இந்தி இத்தகைய பட்ஜெட் படங்களை திரையிட மறுக்கின்றனர்.
என்று மராட்டிய அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.


சல்மான்கான் படத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுத்துள்ளது. மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் விடுத்துள்ள அறிக்கையில், திரைப்படம் என்பதை பொழுதுபோக்காக பார்க்கவேண்டும். மொழியை நுழைத்து அரசியல் லாபம் தேடநினைக்க கூடாது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here