3மாநில தேர்தல் தேதி அறிவிப்பு!

0
1

டெல்லி: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேகாலயா சட்டப்பேரவையின் ஆயுள்காலம் மார்ச் 6-ம் தேதியும், நாகாலாந்து சட்டப்பேரவையின் ஆயுள்காலம் மார்ச் 13-ம் தேதியும், திரிபுரா சட்டப்பேரவையின் காலம் மார்ச் 14-ம் தேதியும் முடிவடைகிறது.

 

இதனையடுத்து இந்த மூன்று மாநிலங்களும் தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ளன. மூன்று சட்டப்பேரவைகளின் பலமும் 60 எம்.எல்.ஏ.க்களே.

திரிபுராவில் வரும் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் வரும் பிப்ரவரி 27-ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்தார். 3மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.


மார்ச் 3ஆம் தேதி எண்ணப்படும். இதையடுத்து அம்மாநிலங்களில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

மேகாலயாவில் முகுல் சங்மா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. திரிபுராவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணிக் சர்க்கார் முதல்வராக உள்ளார் . நாகாலாந்தில் டி.ஆர்.ஜிலியாங் தலைமையிலான நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியின் ஆட்சி நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here