திருடனுக்கு நூதன தண்டனை!

0
1

உத்தரப்பிரதேசம்: ஜஹான்கஞ்ச் நகர் காவல் நிலையப்பகுதியில் உள்ளது தோகா பஜார்.

அங்கு கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு நடைபெற்றது. கண்காணிப்பு கேமராவுக்கு தப்பிய திருடனை  அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சேர்ந்து பிடிக்க முடிவெடுத்தனர்.

அவர்கள் 24மணிநேரமும் மார்க்கெட்டை கண்காணித்து வந்தனர்.  அப்போது வெளியூரிலிருந்து லாரியில் கொண்டுவரப்படும் பொருட்களை கடைக்குள் அடுக்கி வைக்கும் நபர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்நபர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார்.  ஒரு கடையின் பூட்டை உடைக்கும்போது அவர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.

அவரை தோகா பஜாரை சேர்ந்த அனைவரும் தாக்கினர். அவர் முடி மழிக்கப்பட்டது. அதில் திருடன் என்று லிப்ஸ்டிக்கால் எழுதினர்.

பின்னர், கழுதை மீது ஏற்றிவைத்து பஜார் முழுவதும் ஊர்வலமாக அழைத்துவந்தனர். பின்னர் அத்திருடனை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இச்சம்பவம் நடந்துமுடிந்ததும் அங்குவந்த போலீசார் என்னாச்சு என்று கேட்டனர். திருடனை பிடித்து விரட்டிவிட்டீர்களா, சரிதான் என்று கேட்டுச்சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here