பத்து ரூபாய் நாணயங்களை வங்கிகள் வாங்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

0
1

சென்னை: பத்து ரூபாய் நாணயம் பிரச்சனைக்கு முடிவு கட்டும்வகையில் அனைத்து வங்கிகளும் அதனை ஏற்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி பத்து ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது. அவை 14வகை வடிவங்களில் புழக்கத்தில் உள்ளன.

இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இதனை தவிர்க்க பத்து ரூபாய் நாணயங்களை வாங்க வணிகர்கள் மறுத்துவிடுகின்றனர்.

 

எனவே, ஒவ்வொருவர்  வீடுகளிலும் உண்டியல் நிறைய பத்து ரூபாய் நாணயங்கள் கலகலக்கின்றன.

வங்கிகள் மாற்றுவதற்கு சென்றால் அங்குள்ள அதிகாரிகளும் ஏற்க மறுக்கின்றனர்.

வங்கி அதிகாரியிடம் புகார் செய்வதற்காக சென்றால், அலுவலர்கள் பற்றாக்குறை. எண்ணுவதற்கு சிரமமாகிறது. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள்.

இதனால் பத்து ரூபாய் நாணயங்களுக்கு மதிப்பில்லாமல் அன்றாடப்புழக்கத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, புழக்கத்தில் இருக்கும் 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கவை.   அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் அரசின் நாணய அச்சடிப்பு ஆலைகளில் அச்சடிக்கப்பட்டவை  என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

 

முதலில் வங்கிகள் பத்து ரூபாய் நாணயங்களை முன்வந்து ஏற்கவேண்டும். இதுதொடர்பாக அனைத்து வங்கிகளும் விளம்பரங்கள் வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சனைக்கு முடிவுகட்ட முடியும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here