கோவில் சுவர் இடிந்தது! ஆட்சியாளர்கள் அதிர்ச்சி!!

0
1

திருச்செந்தூர்:முருகன் கோவில் சுவர் இடிந்துவிழுந்து பெண் பலியான  சம்பவத்தால் ஆட்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுனாமி அலை வந்தபோதும் பாதிக்கப்படாத கோவில் வளாகம் சில தினங்கள் பெய்த மழையால்தான் இடிந்துவிழுந்தது என்பதை ஆட்சியாளர்கள் ஏற்க தயாராக இல்லை.


2011ல் திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தபோது மேடை இடிந்து விழுந்தது. அப்போது பல பக்தர்கள் காயமடைந்தனர். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், சண்முகநாதன் ஆகியோரது பதவி பறிபோனது.
சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இந்துமுன்னணி பிரமுகர்கள் சந்தித்தனர்.


கோவிலின் பிரகாரச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை முழுவதும் அகற்றி கல்சுவர் எழுப்பவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் குறிப்பிட்ட பிரகாரச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது.
1970ல் வெளிப்பிரகாரத்தில் இருந்த கல்மண்டபம் இடிக்கப்பட்டு காங்கிரிட் மண்டபம் கட்டப்பட்டது. அதற்கு அப்போதே எதிர்ப்பு கிளம்பியது. இருந்தபோதும் காங்கிரிட் கட்டுமானமே கட்டிமுடிக்கப்பட்டது.

இதற்கிடையே திருச்செந்தூர் கோவில் சுவர் இடிப்புகுறித்து 5பேர் குழுவை கலெக்டர் வெங்கடேஷ் அமைத்துள்ளார்.
இந்து அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 5 துறை அதிகாரிகள் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

கோவில்சுவர் இடிந்து விழுந்தால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே பரிகாரம் செய்வது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.

கோவில் சுவர் இடிந்து மரணமடைந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.25லட்சம் வழங்கவேண்டும் என்று அரசை இந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.  இதற்கிடையே முதல்வர் விடுத்துள்ள செய்தியில் கோவில் சுவர் இடிந்து விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு கோவில் நிதியில் இருந்து ரூ.5லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்துக்கோவில்களை இடித்து புத்த விகாரைகளாக்க வேண்டும் என்றுதெரிவித்திருந்தார். எனவே, கோவில் சுவர் இடிந்துவிழுந்ததில் சதி ஏதும் இருக்கிறதா என்று விசாரிக்கவும் இந்து அமைப்பினர் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here