பிரபல இயக்குநர் தசரி நாராயணராவ் காலமானார்

0
2

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் தசரி நாராயண ராவ்(75) காலமானார்.

இவர் 151 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 53 படங்களைத் தயாரித்துள்ளார்.

250 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

மத்திய நிலக்கரித்துறை இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

சில மாதங்களாக, மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் நலக்குறைபாட்டால்  அவதிப்பட்டு வந்தார்.

மூன்று நாள்களுக்கு முன் இரைப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்து வந்தது.

இன்று மாலை அவர் மரணம் அடைந்தார்.

 தசரியின் மறைவுக்கு, ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here